ஈரோடு மாவட்டம்,பெயர்க் காரணம்,வரலாறு & எல்லைகள்:-
ஈரோடு மாவட்டம்,பெயர்க் காரணம்,வரலாறு & எல்லைகள்:- ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும். இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பெயர்க் காரணம்;- பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர். வரலாறு:- இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழ்நாட்டில் எட்டாவது பெருநகரமாக திகழ்வது ஈரோடு மாவட்டம். 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊ